வேலை, வேலை என்று சொல்கிறோமே, அந்த வேலை என்றாவது முடிந்து இருக்கிறதா என்று நாம் பார்த்தால் நமக்கு ஒரே ஒரு பதில் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் இல்லை என்பது மட்டும் தான்.
நாம் வாழ்வதற்காக வேலை செய்கிறோமா? அல்லது வேலை செய்வதற்காக வாழ்கிறோமா?
வேலைக்காகவே வாழ்க்கை என்பதனை விட்டு விட்டு வாழ்க்கையை வாழ வேலை என்பது ஒரு சிறு பகுதி என்பதனை உணருங்கள். அந்த உணர்வினை என்றும் நினைவில் கொள்ளுங்கள். அது உங்களை உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ, அதாவது வாழ்க்கையை வாழ வழி செய்து கொடுக்கும்.
No comments:
Post a Comment